முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மதுபான பாரில் துப்பாக்கி சூடு: 12 பேர் காயம் : அதிபர் ஜோ பைடன் வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      உலகம்
America 2022-11-06

Source: provided

பிலடெல்பியா : அமெரிக்காவில் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். 

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபான பாருக்கு வெளியே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது என்னவென தெரியவில்லை. 

இந்த சம்பவத்திற்கு அதிபர் ஜோபைடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என கண்டனம் தெரிவித்ததுடன், பல படுகொலைகள் செய்திகளாக வெளிவராமல் அதுபற்றி தெரிவது கூட இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து