முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      உலகம்
Egypt 2022-11-06

Source: provided

கெய்ரோ : எகிப்தில் 27-வது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நேற்று தொடங்கியது. 

எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நேற்று முதல் 8-ம் தேதி வரை 27-வது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது.  ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. 

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை வகிக்கிறார். 

மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து