முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால் : காதல் திருமணம்தான் செய்வேன் என பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      சினிமா
Vishal 2022-11-06

Source: provided

சென்னை : சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஷால், தானும் காதல் திருமணம்தான் செய்வேன் என கூறினார். 

சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் நேற்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை நடிகர் விஷால் மணமக்களுக்கு வழங்கினார்.

அப்பொழுது பேசிய நடிகர் விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 11 தங்கச்சிகளை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு மனதில் தோன்றியதை நான் உடனுக்குடன் செய்து விடுவேன். அது போல ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என எனது மனதில் தோன்றியது.

அது போல இந்த ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன். இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். நானும் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வேன். 

நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். நான் யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு நடிகர் விஷால் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து