முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலான் மஸ்க் அடுத்த அதிரடி: பிரபலங்கள் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்குகள் நிரந்தர நீக்கம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-10-28

டுவிட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு சர்வதேச அளவில் புகழ்பெற்ற டுவிட்டர் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமார் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கினார். அதையடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க்,  டுவிட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் கட்டணம் 8 டாலர் (இந்தியாவில் சுமார் ரூ.640) விதிக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.

செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் எலான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள டுவிட்டர் நிறுவனப் பணியாளர்கள் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் பல்வேறு போலி டுவிட்டர் கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் டுவிட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது. எனவே இந்த போலி டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்தவித அறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்பெல்லாம் போலி கணக்குகளை நீக்கப்படுவதற்கு முன்பாக நாங்கள் எச்சரிக்கை அளித்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறயை விரிவுபடுத்தி விட்டதால் எச்சரிக்கைகள் எதுவுமின்றி ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் பயனாளர்களின் டுவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும். இது டுவிட்டரின் ‘ப்ளூ டிக்’ வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து