முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனப்பெருக்கம் குறித்த ஆய்வு: குரங்குகளை விண்வெளிக்கு அனுப்ப சீனா திட்டம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      உலகம்
China-monkey 2022-11-07

குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

சீனா தற்போது புதிதாக விண்வெளியில் 'டியாங்காங்' ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையில், குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு பற்றிய ஆராய்ச்சி நடத்த குரங்கை விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளனர். விண்வெளியில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை தெரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீன ஆராய்ச்சியாளரான ஜாங் லூ கூறுகையில், விலங்குகளைக் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்கள்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன. சோவியத் யூனியன் காலத்தில் இனப்பெருக்க நோக்கத்திற்காக 18 நாட்கள் எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன.ரஷியா மேற்கொண்ட ஆராய்ச்சியில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டுவரப்பட்ட உயிரினங்களுக்கு இடையே இனப்பெருக்கம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்போது குரங்குகள் அனுப்பப்பட உள்ளன.

குரங்குகள் விண்வெளிக்கு அனுப்பப்படுவது புதிதான விஷயமல்ல. புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில், அவை எவ்வாறு வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை தெரிந்துகொள்ள இந்த புதிய ஆராய்ச்சி உதவும். பல நாடுகள் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் குடியேற திட்டமிடுகின்றன, குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதால், இந்த சோதனைகள் கட்டாயம் தேவைப்படும் ஒன்று என்று பேராசிரியரான கெஹ்கூய் கீ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து