முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லவ்டுடே விமர்சனம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      சினிமா
LoveToday-Review 2022-11-07

Source: provided

காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே. நாயகன் பிரதீப்பும் நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார். அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் பல சிக்கல்கள் உருவாகிறது. அவை என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதைச் சொல்லியிருக்கிறது லவ்டுடே படம். இயக்குநர் பிரதீப்பே நாயகனாக நடித்திருக்கிறார், வேணுசாஸ்திரி என்கிற அய்யங்கார் வேடத்தில் சத்யராஜ். சிறப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா பாத்திரமும் மகனிடம் அவர் பேசும் வசனமும் படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது. ஆதித்யா, கதிர் உள்ளிட்ட நாயகனின் நண்பர்கள் படம் இலகுவாக நகர உதவுகிறார்கள். யோகிபாபு, ரவீனாரவி திருமணப் பேச்சு அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன உருவகேலிக்கு எதிராக அமைந்திருக்கிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் காட்சியின் பின்னணி அழகு. யுவனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியன படத்துக்கு இசைவாக அமைந்திருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து