முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி? 15-ம் தேதி அறிவிக்கிறார் டொனால்டு டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2022      உலகம்
Trump 2022-11-08

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். அதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார். இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், அந்நாட்டின் ஒஹியோ மாகாணத்தில் நேற்று ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது, நான் வரும் 15-ம் தேதி செவ்வாய்கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் (பண்ணை வீடு) வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து