முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவகால மாற்ற மாநாட்டிலிருந்து பாதியில் வெளியேறிய ரிஷிசுனக்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2022      உலகம்
Rishi-Sunak 2022-11-08

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 ஐ.நா.வின் பருவகால மாற்ற மாநாடு, எகிப்து நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் கலந்து கொண்டார். 

இந்த நிலையில், பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறினார். இதனால், என்ன, எதுவென தெரியாமல் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார்பன் பிரீப் அமைப்பின் இயக்குனர் லியோ ஹிக்மேன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், 

பருவகால மாற்ற மாநாட்டின் மத்தியில் பிரதமர் ரிஷி சுனக் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றில் கூறும்போது, 

சுனக் மேடையில் பேச தயாரானபோது, அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறியுள்ளனர். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர், ரிஷி சுனக்கின் காதில் ஏதோ முணுமுணுத்தபடி காணப்பட்டார். இதுபற்றி அவர்கள் ஆலோசித்தது போல் தெரிகிறது. மேடையில் இருந்து செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்பது போல் அவர்கள் காணப்பட்டனர். எனினும் தொடர்ந்து மேடையிலேயே சுனக் நின்றார். 

இதனை தொடர்ந்து மற்றொரு உதவியாளர் உடனடியாக மேடைக்கு சென்று உடனே வெளியேறி செல்லும் படி சுனக்கை வற்புறுத்தி, அவரை அழைத்து சென்றார் என ஹிக்மேன் தெரிவித்து உள்ளார். இந்த மாநாட்டின் பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறிய போதும், அதற்கான தெளிவான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதனால், உலக நாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த மாநாட்டில், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து