முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலோனர் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 9 நவம்பர் 2022      உலகம்
England 2022-11-09

Source: provided

லண்டன் : இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6-ல் ஒருவர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இங்கிலாந்து மற்று வேல்ஸில் இந்தியர்கள் 1.5 சதவீத எண்ணிக்கையில் உள்ளன. முன்னதாக, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 75 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு எண்ணிக்கையின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிப்பவர்களில் ஒரு கோடி பேர் வெளிநாடுகளைப் பூர்விகமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில், இந்தியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தியர்கள் 9,20,000 என்ற எண்ணிக்கையிலும், போலாந்து நாட்டவர் 7,43,000 என்ற எண்ணிக்கையிலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 6,24,000 என்ற எண்ணிக்கையிலும் வசிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து