முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: டிரம்ப் கட்சி பிரதிநிதிகள் சபையை கைப்பற்ற வாய்ப்பு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2022      உலகம்
Trump 2022-11-10

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையை டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளது. செனட் சபையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் சமபலம் பெற வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி அதிபர் ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கடந்த 8-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் 21 இடங்கள் எதிர்க்கட்சியான டிரம்பின் குடியரசு கட்சிக்கும், 14 இடங்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கும் உரித்தானவை.  தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 48 இடங்களுடன் சம நிலையில் இருந்தன.  

பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 199 இடங்களும், ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு 178 இடங்களும் கிடைத்துள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆனாலும் இன்னும் 58 இடங்களுக்கு முடிவு வர வேண்டி உள்ளது. எனவே டிரம்பின் குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து