முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல பெண்களுக்கு தலிபான்கள் தடை

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2022      உலகம்
Afghanistan-park 2022-11-10

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்தது. இந்த சம்பவம் உலகளாவிய கண்டனத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் அறநெறி அமைச்சகம் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறியதையடுத்து தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தலிபான்களின் புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து