முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான்கள் தடை

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022      உலகம்
Afghanistan-2022-11-11

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் தடை விதித்துள்ளனர். 

இது குறித்து அந்த நாட்டின் நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது அகீப் முஹாஜிா் கூறியதாவது:-

உடற்பயிற்சி மையங்களில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுவதில்லை. மேலும், அங்கு பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. எனவே, அந்த மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஆண்களையும், பெண்களையும் வெவ்வேறு நாட்களில் அனுமதிப்பது, அவா்களிடையே மறைவுத் தடுப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட எங்களது விதிமுறைகளை உடற்பயிற்சி மையங்கள் தொடா்ந்து மீறி வருகின்றன. எனவே, வேறு வழியில்லாமல் இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து