முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு மேலும் ரூ. 3,238 கோடி ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2022      உலகம்
Ukraine 2022 11 12

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது. 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. 

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,238 கோடி) மதிப்புடைய ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார். 

புதிதாக வழங்கப்படும் இந்த ராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து