முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் விவகாரம்: ஐ.நா. கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2022      உலகம்
UN-Council- 2022 11 12

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நடந்த போராட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் தூதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடந்த மோதலில் 185 பேர் பலியாகி விட்டதாகவும், இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்தனர்.  இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்த நாடுகளின் தூதர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா.மனித உரிமைகள் கவுசிலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஈரான் இஸ்லாமிய குடியரசில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு நிலைமையை சரி செய்ய, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் அமர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். வரும் 24-ம் தேதி இந்த கூட்டம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து