முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து 10,000 பேரை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2022      உலகம்
Amazon 2022-11-15

Source: provided

வாஷிங்டன் : டுவிட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடத்த ஓராண்டாகவே கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பணவீக்கம், மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையாழ் அந்நிறுவனத்தின் மூலதன மதிப்பில் ரூ. 81 லட்சம் கோடி சரிந்துள்ளது.  இதனால் செலவுகளை குறைக்கும் விதமாக மிகவிரைவில் 10,000 பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் இந்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த சில மாதங்களில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கை எடுத்துள்ளன. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்தது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் அங்கும் பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.தொலில்நுட்ப துறையில் அலை, அலையாய் பணிநீக்கம் அதிகரித்து வருவது அத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து