முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Trump 2022-11-16

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கடந்த 15-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் நேற்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார். டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார். டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து