முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி லண்டனில் லேசர் ஒளிக்காட்சிகள்

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
London 2022-11-16

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவில் வருடாந்திர கிறிஸ்துமஸ் பண்டிகைகாக நடத்தப்பட்ட லேசர் ஒளி காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. 

ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் க்யூ என்ற க்யூ பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் ராயல் தாவரவியல் பூங்கா முன்பு இந்த வண்ண மையமான லேசர் ஒளி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஒளி மற்றும் பைரோடெக்னிக் ஷோ என்ற லேசர் ஒளிக்காட்சிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.  சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பூங்காவின் பாதை முழுக்க கிறிஸ்துமஸ் மரம் போன்ற 22 அற்புத கலை அம்சங்கள் கொண்ட விளக்குகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. 

இந்த லைட் அப் மரங்களுடன் ஒத்திசைவாக வண்ண மையமான ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது. இதனிடையே பையோ டீசல் எரிபொருளை மட்டுமே பயன்படுத்தி இந்த எல்.இ.டி. விளக்குகள் மற்றும் லேசர் விளக்குகளை எரியவைப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த வண்ண மையமான லேசர் காட்சிகள் வரும் கிறிஸ்துமஸ் வரையில் லண்டன் மக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து