Idhayam Matrimony

தங்கம் அதிக கையிருப்பு உள்ள நாடுகள் பட்டியலில் 9-வது இடத்தில் இந்தியா

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      உலகம்
Gold-2022 11 17

தங்கம் கையிருப்பு அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 

உலகிலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 1,133 மெட்ரிக் டன் அளவுக்கான தங்கத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது. அடுத்ததாக 3,358 மெட்ரிக் டன்னுடன் ஜெர்மனி 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அளவுக்கு ஜெர்மனியில் தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது. எந்தவித மாற்றமுமின்றி 2,451 மெட்ரிக் டன் தங்க கையிருப்புடன் இத்தாலி 3-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் 1,040 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது. 

8-வது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 845 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. 757 மெட்ரிக் டன்னுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 2000-ம் ஆண்டில் 357 மெட்ரிக் டன் என்ற நிலையில் இருந்து தற்போது 757 மெட்ரிக் டன்னாக சுமார் 112 சதவீதம் இந்தியாவில் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது. நெதர்லாந்து நாட்டிடம் 612 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து