முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.சி. இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக போராட்டம்: புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      அரசியல்
PMK-1-2022 11 17

எம்.பி.சி. இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பா.ம.க.வினர் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பேரவைக் கதவுகள் மூடப்பட்டன.

புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று காலையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ம.க.வினர் திரண்டு ஊர்வலமாக சட்டசபையை நோக்கி புறப்பட்டனர். போலீசார் ஆம்பூர் சாலை அருகே பேரிகார்டு அமைத்து ஊர்வலத்தை தடுக்க திட்டமிட்டனர். ஆனால், ஊர்வலத்தில் வந்தோர் பேரிகார்டை தள்ளி முன்னேற முயன்றனர். இதற்கிடையில் ஊர்வலத்தின் பின்புறத்தில் இருந்து போலீசாரை நோக்கி தண்ணீர் பாக்கெட், கற்கள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

ஒருகட்டத்தில் போலீசாரை தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நோக்கி பா.ம.க.வினர் முன்னேறி சென்றதால் சட்டப்பேரவை நுழைவாயில்கள் மூடப்பட்டன. அதை தொடர்ந்து சட்டப்பேரவை முன்பு அமர்ந்து பா.ம.க.வினர் தர்ணாவில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதை தொடர்ந்து பா.ம.க.வினர் ஆம்பூர் சாலை பகுதிக்கு சென்று இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து