முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022      உலகம்
Nancy-Pelosi 2022-11-18

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்த இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி உள்ளனர். இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்கு குடியரசுக் கட்சியினருடன் ஜோ பைடன் மோதல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க மக்கள் குடியரசுக் கட்சியை தேர்வு செய்வதற்கு தயாராகி விட்டனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் கெவின் மக்கார்தி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, சபையின் அடுத்த சபாநாயகராக ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசிக்கு பதிலாக மக்கார்தியை குடியரசுக் கட்சி தேர்வு செய்துள்ளது. இதனால் மக்கார்திக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நான்சி பெலோசி கூறுகையில், அடுத்த காங்கிரஸில் ஜனநாயகக் கட்சித் தலைமைக்கு நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்து விட்டது என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து