முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி உக்ரேனியர்கள் மின்சாரமின்றி உள்ளனர்: அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022      உலகம்
Jelensky 2022-11-18

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 9 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைன் முழுவதும் நகரங்களைத் தாக்கி நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை முடக்கியதால், ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.  

குறிப்பாக, ஒடெசா, வின்னிட்சியா, சுமி மற்றும் கிய்வ் ஆகியபகுதிகள் மின்வெட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மின் வினியோகத்தை சீர் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து