முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023-ல் இந்தியா வருகிறார் ஆஸ்திரேலியா பிரதமர்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
Anthony 2022-11-19

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, 

ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தேன். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவை விரிவுபடுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். வரும் மார்ச் மாதம் நான் இந்தியா வருவேன். அப்போது நாங்கள் ஒரு வணிகக் குழுவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வோம். இது ஒரு முக்கியமான வருகையாக இருக்கும். அது நமது இரு நாடுகளுக்கும் இடையே நாம் கொண்டுள்ள உறவை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து