முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசிக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது : காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      இந்தியா
MODI-3 2022-11-19

Source: provided

வாராணாசி : காசிக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது என்று காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்கமாக, இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்தினார். இளையராஜா மற்றும் அவரது குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹர ஹர மகாதேவ் பாடலை பிரதமர் நரேந்திர மோடி கேட்டு மகிழ்ந்ததோடு, இளையராஜாவை பாராட்டினார். 

பின்னர் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், "வணக்கம் காசி" "வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன். 

காசியைப் போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும், பெருமையும் வாய்ந்தது. கலாசார பெருமை வாய்ந்தது. பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது. காசியில் துளசிதாசரும், தமிழகத்தில் திருவள்ளுவரும் பெருமை வாய்ந்தவர்கள் என அவர் பேசினார். 

காசியும், தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றது. காசிக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது வேற்றுமையில், ஒற்றுமை காணவே இந்த காசி-தமிழ் சங்கமமே சாட்சி. காசியும்,  தமிழ்நாடு கோயில்களுக்கு பிரசித்தி பெற்றவை. உலகிலேயே மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியை நாம் வளர்க்க வேண்டும்.  காசி-தமிழ் சங்கமம் என்பது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பந்தம். தமிழ் கலசாரதிருமணங்களில் காசி யாத்திரை பெருமை பெற்றது என்று அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து