முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல காலத்தின் 2-வது நாள்: சபரிமலையில் மழையில் நனைந்தபடி நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022-11-19

மண்டல காலத்தின் இரண்டாவது நாளான நேற்று சபரிமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் மழையில் நனைந்த படி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். முதல் நாளில் தமிழகம் , கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மீண்டும் கன மழை பெய்த நிலையில் கொட்டும் மழையில் தரிசனம் செய்ய வரிசையில் நீண்ட தூரம் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்த படி ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பிகாத்திருந்து தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் மண்டல காலத்தின் இரண்டாவது நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் மழையில் நனைந்த படி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நிலக்கல், எருமேலி, பம்பா, சன்னிதானம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு மலை ஏறி செல்ல சிரமம் ஏற்பட்டாலும் ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளி உணர்த்தல், நிர்மால்ய பூஜை, போன்ற அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்  தொடர்ந்து 4 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 

 ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் மழையில் நனைந்தவாறு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.  டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நேற்றும் தமிழகம், கர்நாடக, ஆந்திர மாநில பக்தர்கள் அதிகம் பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து