முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.4.78 லட்சம் கடன் உதவியா? - வதந்தி என மத்திய அரசு தகவல்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலியான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து