முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி.- சி 54 ராக்கெட்டை வரும் 26-ம் தேதி விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      இந்தியா
Isro 2022--10-07

Source: provided

ஐதராபாத் ; இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 26-ம் தேதி  பி.எஸ்.எல்.வி. - சி 54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி. - சி 54 ராக்கெட்டில் ஓசன்சாட்-3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்  மற்றும் 8 சிறிய வகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக் கோள் ஏவுதல் வரும் 26-ம் தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பி.எஸ்.எல்.வி. - சி 54 திட்டத்தில் ஓசன்சாட்-3 புவி கண்காணிப்பு  செயற்கைக் கோள் மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. மேலும், அமெரிக்காவினுடைய சிறிய வகை நானோ செயற்கைக் கோள்களும் ஏவப்பட உள்ளன என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து