முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      உலகம்
Jagadeep-Thankar 2022-11-20

Source: provided

தோகா : உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதையொட்டி இரண்டு நாள் பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று கத்தார் சென்றடைந்தனர்

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது.  கால்பந்து ரசிகர்களை கட்டிப் போடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று கத்தார் சென்றடைந்தனர். தோகா விமானம் நிலையம் வந்த அவர்களை அந்நாட்டு அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து