முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      சினிமா
Patattu aracan 2022 11 21

Source: provided

லைகா ப்ரொடக்ஷன்ஸ் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள  திரைப்படம் பட்டத்து அரசன். இந்த படத்தில் ராதிகா, ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும்  வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் திரைப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சற்குணம், தஞ்சை ஆம்லாப்பட்டு கிராமத்தில் அப்பா மகன், பேரன், மாமன், மச்சான், என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்ட போது அது என்னை பாதித்தது. அது தான் படத்தின் கரு என்றார். படத்தில்  கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே வைக்கப்பட்டுள்ளது. முழுவதுமே கபடி விளையாட்டாக இருக்காது. நாயகி ஆஷிகா ரங்கநாத் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. இதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷ்ன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் படமாக வந்துள்ளது. ராஜ்கிரண், அதர்வா மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து