முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரின் புளூ டிக் சேவை நிறுத்தம்: எலான் மஸ்க் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-10-28

அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ டிக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

 உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். 

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம் தோறும் ரூ. 1600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டுவிட்டர் புளூ டிக்கிற்கு  இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ டிக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து