முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      அரசியல்
GK-Vasan 2022 09 14

பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் நாளை 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழக அரசு பால் விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் 24-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை, ராஜாஜி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் த.மா.கா.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. 

அதாவது தமிழக அரசு ஆரஞ்ச் நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியது. இதனால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண நடுத்தர மக்களும், அவ்வப்போது ஆரஞ்ச் நிற பாக்கெட் பாலை வாங்க நேரிடும் ஏழை, எளிய மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே எனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட த.மா.கா தலைவர்களும், மாநில மாவட்ட நிர்வாகிகளும், துணை அமைப்பினரும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து