முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் 2023-ல் ஏவ திட்டம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
Shivan 2022 11 22

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார். 

நாகர்கோவிலில் நேற்று இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி 4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது. 

ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும். 

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து