முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்த சவுதி அரேபியா அணி

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      விளையாட்டு
Saudi-team 2022 11 22

Source: provided

தோகா : உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து சவுதி அரேபியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

கத்தாரில்...

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

மெஸ்ஸி கோல்... 

இந்தத்தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

சலே அல்ஷெரி... 

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் போட்டடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து