முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தத்துப்பிள்ளைகளுக்கும் பெற்றோரின் வேலையைப்பெற உரிமை உண்டு : கர்நாடகா ஐகோர்ட் கருத்து

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      இந்தியா
Karnataka-Govt 2022-10-22

Source: provided

பெங்களூரு : பெற்ற குழந்தைகளைப் போல கருணை அடிப்படையில் பெற்றோர்களின் வேலையினை பெற தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெற்ற குழந்தை தத்துக்குழந்தை என்று வேற்றுமை கடைபிடித்தால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.

மறைந்த தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று தத்துப்பிள்ளை ஒருவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், "ஒரு மகன், மகள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும், தத்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளே. இதில் சொந்த பிள்ளை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்ற வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இது அரசியலமைப்பு பிரிவு 14 - ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதி மாற்றியமைக்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

விநாயக் எம் முட்டாட்டி என்பவர் கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் உள்ள ஜேஎம்எஃப்சியில் உள்ள உதவி அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணிபுரிந்துவந்தார். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முறைப்படி ஒரு மகனை தத்தெடுத்துக்கொண்டார். இந்த நிலையில் முட்டாட்டி கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். அதே வருடம் கருணையின் அடிப்படையில் தனது தந்தையின் வேலையைத் தனக்கு தரவேண்டும் என்று கோரி முட்டாட்டியின் தத்துப்பிள்ளையான கிரிஷ் விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு, சம்மந்தப்பட்ட துறை கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையினை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்க விதிகளில் இடம் இல்லை என்று கூறி கிரிஷின் கோரிக்கையை நிராகரித்தது. இதனை எதிர்த்து கிரிஷ் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு தனிநீதிபதி அமர்வு கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையை தத்துப்பிள்ளைக்கு வழங்க விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி கிரிஷின் மனுவினைத் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் தனிநீதிபதியின் தீர்ப்பினை எதிர்த்து கிரிஷ் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்திருந்தார். இதற்கியிடையில், கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரலில் தந்தையின் வேலையைப் பெறுவதில் பெற்றக்குழந்தை, தத்துக்குழந்தைக்கும் இடையில் உள்ள பாரபட்சம் நீக்கப்பட்டு விதிகள் மாற்றப்பட்டன.

கிரிஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ், ஜி.பசவராஜா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. கருணையின் அடிப்படையில் வேலை கேட்டு மனுதாரர் சமர்பித்துள்ள ஆவணங்களை பெற்ற பிள்ளை தத்துப்பிள்ளை என்ற பாரபட்சம் காட்டாமல், விண்ணப்பதாரரை இறந்தவரின் சொந்த மகனாக கருத வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து