முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது சிவில் சட்டம் உள்பட 40 வாக்குறுதிகள்: குஜராத் தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு : தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
JP-Natta 2022 11 26

Source: provided

காந்திநகர் : குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், குஜராத்தில் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் உள்ளிட்ட வாக்குகுறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்தர படேல், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் 40 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜெ.பி.நட்டா, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

பாஜகவின் ஆட்சியில் குஜராத் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருப்பதாகவும், அந்த வளர்ச்சி அடுத்தகட்டத்திற்குச் செல்ல பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறும் அவர் வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

முக்கிய அம்சங்கள்:

1) பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.

2) 2036 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக 'குஜராத் ஒலிம்பிக் மிஷன்' தொடங்கப்படும்.

3) பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் சிலீப்பர் செல்களை அடையாளம் காண ஒரு "தீவிரமயமாக்கல் எதிர்ப்பு செல்" உருவாக்கப்படும்.

4) வக்பு வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஆய்வு செய்யவும், மதரஸாக்களின் பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தவும் ஒரு பணிக்குழு அமைக்கப்படும்.

5) குஜராத் மத சுதந்திர (திருத்தம்) சட்டம், 2021 இன் கீழ் கட்டாய மதமாற்றங்களுக்கு நிதி அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படும்.

6) பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் குஜராத் மீட்பு சட்டன் இயற்றப்படும்.

7)  மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் இலவச பேருந்து பயணங்கள்.

8) பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

9) 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.

10) பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும்.

11) 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து