முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் என்கவுண்டர்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
Chattishkar 2022 11 26

Source: provided

பிஜப்பூர் : சத்தீஷ்கர் மாநிலத்தில் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க காதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., கூறும்போது, "பொம்ரா காட்டுப் பகுதியில் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து