முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது ஓரியன் விண்கலம் : வீடியோ வெளியிட்ட நாசா

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      உலகம்
NASA 2022 11 26

Source: provided

வாஷிங்டன் : நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

புளோரிடாவிலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கினர். பின்னர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவித்தது. 

இந்த விண்கலம் வரும் ஆண்டுகளில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்ல உள்ளது. கடந்த 1972-ல் அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி எடுத்து வைக்கும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த முதல் சோதனை விண்கலம் வீரர்கள் இல்லாமல், பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஓரியன் சந்திரனில் இருந்து 40,000 மைல்கள் உயரத்தில் பறக்கும் என்பதால் அதன் சுற்றுப்பாதை தொலைவில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. 25 நாட்களுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு, விண்கலம் டிசம்பர் 11-ம் தேதி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டு, பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும். 

இந்த பணியின் வெற்றியானது ஆர்ட்டெமிஸ் 2 பணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இது விண்வெளி வீரர்களை தரையிறங்காமல் சந்திரனைச் சுற்றி அழைத்துச் செல்லும். பின்னர் ஆர்ட்டெமிஸ் 3, இறுதியாக மனிதர்கள் நிலவில் இறங்கி, பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும். அந்த பணிகள் முறையே 2024 மற்றும் 2025-ல் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து