முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் இலக்கை விரைவில் அடைவோம்: ரஷ்ய அதிபர் புடின்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      உலகம்
Putin 2022-11-05

Source: provided

மாஸ்கோ : உக்ரைனில் நமது இலக்கை விரைவில் அடைவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நேற்று 276-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. 

ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய வீரர்களில் 17 பேரின் தாயாரை அதிபர் புடின் நேரில் சந்தித்தார்.

அப்போது புடின் பேசுகையில், இந்த வழியை நான் தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த தலைமையும் ஏற்றுக் கொள்கிறது. உக்ரைனில் நாம் நமது இலக்கை அடையவேண்டும். இறுதியில் நமது இலக்கை நாம் அடைவோம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து