முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ரயிலின் பயணம் இங்கிலாந்தில் தொடங்கியது

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      உலகம்
England 2022 11 26

Source: provided

லண்டன் : வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ரயில் இங்கிலாந்து நேற்று முன்தினம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 வாரங்களுக்கு இந்த ரயில் சேவை இருக்கும். 

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஒளிரும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் ரயில் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள டார்ட்மவுத் நீராவி ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலானது, வண்ண வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த கிறிஸ்துமஸ் ரயில், இரவு நேரங்களில் ஒளிர்ந்தபடி தண்டவாளங்களில் ஊர்ந்து செல்லும் காட்சியானது கண்களுக்கு விருந்தாக அமையும். அதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த கிறிஸ்துமஸ் ரயில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 வாரங்களுக்கு இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து