முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி : திட்டத்தை துவக்கி வைத்த உதயநிதி பஸ்சில் பயணம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Udayanidhi 2022 11 26

Source: provided

சென்னை :  சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (ஜி.பி.எஸ்.) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அமைச்சர் சிவசங்கர் தலைமையிலும், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையிலும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. துவக்கி வைத்து பஸ்சில் பயணம் செய்தார். இவ்விழாவில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கோபால் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.          

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு எவ்வித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.  மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து