முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் ஆடை அணியாவிட்டாலும்... சர்ச்சையான கருத்தை தெரிவித்த பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      இந்தியா
baba-ramdev-2022-11-26

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்' என்ற ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கமளிக்க கோரி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யோகா குரு ராம்தேவ் பாபா பெண்கள் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து மூன்று நாட்களுக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்று மராட்டிய மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகாங்கர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தானேயில் நடந்த விழா ஒன்றில் ராம்தேவ் பாபா கலந்து கொண்டார். இந்த விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர்கள் முன்னிலையில் பேசிய ராம்தேவ் பாபா, பெண்கள் சேலையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாகத் தெரிகிறார்கள் என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சகாங்கர் அனுப்பியுள்ள நோட்டீசில், பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையிலான அநாகரீகமான உங்கள் கருத்துக்கு எதிராக ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநில மகளிர் ஆணையம், 1993-ன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3)-ன் படி, பாபா ராம்தேவ் தனது கருத்து குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து