முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மேக்கி காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
Vladimir-Mackie 2022 11 27

Source: provided

மின்ஸ்க் : பெலாரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேக்கி நேற்று காலமானார். 

பெலாரஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் விளாடிமிர் மேகி தனது 64-வது வயதில் காலமானார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சரின் திடீர்  மறைவு தொடர்பான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. வெளியுறவு அமைச்சர் மேக்கியின் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். 

மேக்கி, கடந்த 1958-ல் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தார். 1980-ல் மின்ஸ்க் மாநில கல்வியியல் நிறுவனம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திர அகாடமியில் பட்டம் பெற்றார். ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக பேசக்கூடிய விளாடிமிர் மேக்கி 2012-ம் ஆண்டு முதல் பெலாரஸ் குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 

அவர் பெலாரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சராவதற்கு  முன்பு, 2000-2008 வரை அவர் பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதியின் உதவியாளராக இருந்தார். பெலாரசின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மேக்கி நவம்பர் தொடக்கத்தில் டெல்லி விஜயம் செய்தார்.

இந்தியாவுடன் இருதரப்பு பொருளாதார உறவுகள், உக்ரைன் மோதல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் பலதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து