முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் கெர்சான் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15 போ் பலி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
Russia 2022-11-27

Source: provided

கீவ் ; உக்ரைனின் கெர்சான் நகரில் ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சமூக வலைதளத்தில் நகர ராணுவ நிர்வாகப் பிரிவு அதிகாரி காலினா லுகோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

கொ்சானில் ரஷ்யா வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 15 போ் பலியாகினர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இது தவிர, மேலும் 35 பேர் ரஷ்ய தாக்குதலில் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உக்ரைன் படையினரின் பதிலடித் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், போரின் தொடக்கத்திலேயே தாங்கள் கைப்பற்றியிருந்த அந்த நாட்டின் கெர்சான் நகரிலிருந்து ரஷ்யப் படையினா் கடந்த 10-ம் தேதி வெளியேறினர். எனினும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ராணுவமல்லாத பொதுக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து