முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அமைதி பாதுகாப்புக்காக இந்திய, ஆஸ்திரேலிய ராணுவ கூட்டு பயிற்சி தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Indian-Australian 2022-11-2

Source: provided

புது டெல்லி ;  ஐ.நா. உத்தரவின் பேரில் உலக நாடுகளின் அமைதி பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் நேற்று முதல் 15 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.  

உலக நாடுகளின் அமைதியை பாதுகாக்கும் முயற்சியாக ஐ.நா. உத்தரவின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட முடிவானது. இதன்படி, நேற்று 27-ம் தேதி முதல் டிசம்பர் 11-ம் தேதி வரையிலான 15 நாட்கள் இந்த ராணுவ கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.  

இதற்காக ராஜஸ்தானில் இந்திய ராணுவமும், ஆஸ்திரேலிய ராணுவமும் இணைந்து ஆஸ்திராஹிந்த்-2022 என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.  இதற்கான தொடக்க விழா நேற்று தொடங்கியது. இந்த ராணுவ பயிற்சியில் வீரர்கள் மற்றும் சில வீராங்கனைகளும் பங்கேற்றனர். நீண்ட, பெரிய மற்றும் இயந்திர துப்பாக்கி சுடுதல், ஹெலிகாப்டரில் கயிறு வழியே ஏறி, இறங்குதல், தடைகளை கடந்து செல்லுதல் உள்ளிட்ட கடினம் வாய்ந்த பயிற்சி முறைகளை அவர்கள் மேற்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து