முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதி ஸ்டாலினுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Kamal 2022-11-27

Source: provided

சென்னை : உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகரும், சேப்பாக் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்து கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து