முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை ப்ரியாமணி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Priyamani 2022-11-28

Source: provided

பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் DR 56 என்ற படம் மூல்ம ரீ என்டிரி கொடுக்கிறார் ப்ரியாமணி. ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் நேரடியாக வெளியாகிறது இப்படம். படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. பாலாஜி வெளியிடுகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெட்டி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பேசிய நாயகி ப்ரியாமணி, சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நடித்து வெளிவரும் படம்  DR 56. இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ரோல். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றார். இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படம். இதில் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன் என்றார். டிசம்பர் ஒன்பதாம் தேதி DR 56 வெளியாகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து