முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே கோப்பை போட்டி: ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்த ருதுராஜ்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      விளையாட்டு
Rudraaj 2022-11-28

Source: provided

அகமதபாத் : விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார மகராஷ்டிர வீரர் ருதுராஜ் ஜெய்க்வாட்.

காலிறுதி போட்டி...

உத்தரப் பிரதேச அணி - மஹாராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் நேற்றைய ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். 109 பந்துகளில் சதமடித்த ருதுராஜ், 138 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகு இன்னும் அதிரடியாக விளையாடிய 153 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார். 

7 சிக்ஸர்கள்...

சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து சாதனை செய்தார் ருதுராஜ். அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் 7-வது சிக்ஸரை அடிக்கும் வாய்ப்பு ருதுராஜுக்குக் கிடைத்தது. கடைசியில் 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 220 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். மஹாஷ்டிர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. 

பல்வேறு புதிய சாதனைகள்:

1) முதல் 50 ரன்கள் - 71 பந்துகள்.

2) 100 ரன்கள்: 109 பந்துகள்.

3) 150 ரன்கள் - 138 பந்துகள்.

4) இரட்டைச் சதம் - 153 பந்துகள்.

5) 220* ரன்கள் - 159 ரன்கள்.

முதல் 109 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ருதுராஜ் அதற்குப் பிறகு 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 120 ரன்களைக் குவித்தார்.

* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சராசரி கொண்ட வீரராக உள்ளார் ருதுராஜ் (குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ்).

1. ருதுராஜ் - 58.71 (69 இன்னிங்ஸில் 3758 ரன்கள்).

2. கோலி - 56.50 (286 இன்னிங்ஸில் 13,786 ரன்கள்).

3. புஜாரா - 56.49 (115 இன்னிங்ஸில் 5254 ரன்கள்).

1) 220* ரன்கள். இதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் எடுத்த அதிக ரன்கள்.

2) லிஸ்ட் ஏ  கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தது இதுவே முதல்முறை அல்ல. 2018-ல் ஹேமில்டனில் நடைபெற்ற தி ஃபோர்ட் கோப்பைக்கான நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் - சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியைச் சேர்ந்த ஹாம்ப்டன் - கார்டர் ஆகிய இருவரும் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தார்கள். ஹாம்ப்டன் 23, கார்டர் 18 ரன்கள். எனவே இதன் சாதனையை ருதுராஜ் நேற்று சமன் செய்துள்ளார். 

3) லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் பேட்டர், ருதுராஜ். 

4) லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த 11-வது இந்தியர், ருதுராஜ். ஒட்டுமொத்தமாக 39 இரட்டைச் சதங்கள். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அடித்த இரட்டைச் சதங்களில் இதற்கு 5-வது இடம். சமீபத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் அதிகபட்சமாக 277 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். 

ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள்:

1) ருதுராஜ் - 16 சிக்ஸர்கள்.

2) ரோஹித் சர்மா - 16 சிக்ஸர்கள்.

விஜய் ஹசாரே போட்டியில் ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள்

1. ருதுராஜ் - 16 சிக்ஸர்கள்.

2. ஜெகதீசன் - 15 சிக்ஸர்கள்

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 5 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ். 136 vs மத்தியப் பிரதேசம், 154* vs சத்தீஸ்கர், 124 vs கேரளம், 21 vs உத்தரகண்ட், 168 vs சண்டிகர், 124* vs ரெயில்வே, 40 vs பெங்கால், 220* vs உத்தரப் பிரதேசம் (நேற்று).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து