முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் ரூ. 30.26 கோடியில் 51 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
CM-1 2022-11-29

அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,  கால்நடை பராமரிப்புத் துறை,  கூட்டுறவுத் துறை,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில்  மொத்தம் 30 கோடியே 26 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், இவ்விழாவில்  கால்நடை பராமரிப்புத் துறை,   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ஒரு கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 

இந்த விழாவில், அமைச்சர்கள்  கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன்,  பிரபாகரன், அரியலூர் மாவட்ட கலெக்டர்  ரமண சரஸ்வதி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து