முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா - கத்தார் இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      உலகம்
China-Qatar 2022-11-30

Source: provided

பெய்ஜிங் : சீனா - கத்தார் இடையே இயற்கை திரவ எரிவாயு கொள்முதல் மற்றும் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இயற்கை திரவ எரிவாயு கொள்முதல் மற்றும் விற்பனை ஒப்பந்தத்தில் சைனோபேக் மற்றும் கத்தார் எரிசக்தி கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது தொடர்பாக காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தின் போது, சைனோபேக் நிறுவனத்தின் தலைவர் மா யோங் ஷோங் மற்றும் கத்தாரின் எரிசக்தி விவகாரங்களுக்கான அமைச்சரும், கத்தார் எரிசக்தி கார்ப்பரேஷனின் தலைவருமான ஷாத்-அல்-காபி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இந்த ஒப்பதமானது கத்தாரின் வடக்கு பகுதியின் திறன் விரிவாக்கத் திட்டத்தில் இருதரப்புக்கும் இடையிலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இது சீன சந்தையில் இயற்கை எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் நார்த் பீல்ட் திறன் விரிவாக்க திட்டப் பணியின் முதலாவது எல்.என்.ஜி. கொள்முதல் மற்றும் விற்பனை ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து