முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் வரும் 15-ம் தேதி 100 பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
dmk 2022-12-01

Source: provided

சென்னை: தி.மு.க. நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமை கழகத்தின் சார்பில் வருகிற 15-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்பட மாநிலம் முழுவதிலும் உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் 19-ம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியரின் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்.  தி.மு.க. நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமை கழகத்தின் சார்பில் வருகிற 15-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட வேண்டும். அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பேராசிரியரின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும்.  18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் . பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாளான 19-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து