முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது: 5ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
G-20-2022-12-01

 ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை நேற்று முறபை்படி ஏற்றது. பிரதமர் மோடி, ஓராண்டுக்கு ஜி-20 அமபை்பின் தலைவராக செயல்படுவார். நாடு முழுவதும் 50 நகரங்களில் 32 துறைகளுடன் இணைந்து 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வரும் 5ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 

இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், அடுத்தாண்டு (2023) ஜி-20 அமபை்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (டிச. 1) அதிகாரப்பூர்வ முறபை்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவின் ஜி-20 நிகழ்ச்சி நிரலானது செயல் சார்ந்ததாகவும், லட்சியம் சார்ந்ததாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்.

இந்தியாவின் ஜி-20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையிடமாக மாற்ற ஒன்றிணைவோம். மிகவும் சக்திவாய்ந்த ஜி-20 நாடுகளிடையே, பிற நாடுகளுடனும் நேர்மையான உரையாடலை இந்தியா ஊக்குவிக்கும். மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தபை் பயன்படுத்துதல், ஜனநாயகத்தின் அடித்தளதிற்கு இந்தியா பங்களிக்கும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற நம்பிக்கையை கொடுப்பதில் இந்தியா கவனம் செலுத்தும். இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியானது, ஒற்றுமையின் உணர்வை ஊக்குவிக்கும்.

உணவு, உரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியலற்றதாக்க மாற்ற இந்தியா முயலும். அவ்வாறு செய்வதால், புவிசார் அரசியல் பதற்றங்கள் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்காது. ஒவ்வொரு இந்தியனும் ஜி-20 தலைவர் பதவியை ஏற்பது பெருமைக்குரிய தருணமாகும். நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்களை நடத்துவோம். இதன்மூலம், இந்தியாவின் அதிசயம், பன்முகத்தன்மை, பாரம்பரியங்கள் மற்றும் கலாசார செழுமையை பகர்வோம். இந்தியாவில் ஜனநாயகத்தின் தனித்துவமான கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க விரும்புகிறோம்.நாம் இணைந்து ஜி-20 மாநாட்டை உலகளாவிய மாற்றத்தின் கருவியாக மாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார். 

ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றதால், அதன் தலைவராக பிரதமர் மோடி செயல்படுவார். நாடு முழுவதும் 100 நினைவு சின்னங்களில் ஜி-20 லோகோவுடன் மின்னொளியில் ஒளிரும். இந்தாண்டு முழுவதும் 50 நகரங்களில் 32 துறைகளுடன் இணைந்து 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வரும் 5ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து